தொல்காப்பியத்தின் பின் ஒளிவதேன்

தொல்காப்பியம்

நேரிசை வெண்பா

தொல்காப்பி யத்தின் ஒவ்வாக் கவிகளாம்
பொல்லா ஒளவை புகழேந்தி --. நல்கம்பன்
எல்லாமும் அப்படியாம் இத்தளத்தில் சொன்னவர்
வில்லங் கமினியுரைப் பேன்

பெருமகத்தி தேரை சிவாக்கியன் இன்னும்
திருக்குறளில் மோனை எதுகை -- தருவாரே
மூலர் அகத்தியுடன் போககுரு மற்றுமாம்
காலங்கி யுந்தவறா தே

தொல்லாம் பழமை யுதவாது யாப்பிலே
எல்லா மமைத்ததை ஏற்றினர் --. கல்லாதோர்
வில்லங்கம் சொல்லிக் பிழைப்போர் பிறர்குமே
நல்வழிக் காட்டார் பகரு

தொல்காப்பியம் படித்தவன் யார் புரிந்தவன் யார். ஓரிரு பாட்டை
மனனம் செய்து ஒப்பிப்பன் அவ்வளவு தான். தொல்காப்பிய விளக்கமே
வகைசெய்து யாப்பிலக்கணம் தந்தார். பின்னும் தொல்காப்பிய
மெனக்கூறி செல்வாரை ஒளியாதே என்றே கூறுவது மிகப் பொருந்தும்.


......

எழுதியவர் : பழனி ராஜன் (31-Jul-21, 12:31 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 37

மேலே