என் தொடலில் நீ வெட்கப்படும் போது

மலர்களில் நான்
மல்லிகையை விரும்புகிறேன்
ரோஜாவையும்தான்
ரோஜாவை
உன் சிவந்த மேனிக்காக
மல்லிகையை
உன் புன்னகைக்காக
ரோஜா வெல்கிறது
என் தொடலில் நீ வெட்கப்படும் போது
நீ சிரிக்கும் போது
மல்லிகை .....

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jul-21, 7:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 92

மேலே