அநியாயம்

அநியாயம்

கண்டதை படிப்பவன்
பண்டிதன் ஆகிறான்
வாஸ்தவம் ||

கண்டதை தின்பவன்
ஆரோக்கியமாக வாழ்கிறானா?
இல்லவே இல்லை ||

கண்டவளை காதலிக்கிறவனை
மன்மதன் என்று அல்லவா
அழைக்கிறோம் || அஃதே

கண்டவனை காதலிக்கிறவளை
விலைமாது என்றல்லவா
அழைக்கிறது  சமூகம் ||

மன்மதி என்றழைப்பதில்லையே  
அநியாயமாக இல்லையா?||
ஆணுக்கொரு நீதி அதுவேன்
பெண்ணுக்கொரு நீதி தகுமோ ||

உள்ளதை உள்ளபடி சொல்ல வந்த
உள்ளத்தை பழி சொல்லாதே வாழ
வழி சொல் நலமாகும் ||

கரும்பை விளைவிப்பது நாமாக
இருப்பினும் அத்துள் மதுரம்
வைப்பது நாமல்லவே||

மலர் கொடியை வளர்ப்பது நாமாக
இருப்பினும் மலருள் வாசம்
வைப்பது நாமல்லவே ||

தகுதியைத் தருவதும் அவனே
வெகுமதியை தருவது அவனே
உழைப்பை தருவது நீதான் என்றாலும்
பலத்தை தருவது அவன்தானே ||


ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்.

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (1-Aug-21, 9:05 pm)
Tanglish : aniyaayam
பார்வை : 94

மேலே