மழை வரும் நேரம்
மழை வரும் நேரம்
வெண்மையாய் இருந்த வெண்மேகம்
கண்மையாய் கருத்துநின்ற நேரம் அது......
முரசொலியைவிட முரட்டுத்தனமாக விழும் இடி....
ஆடிதிங்கள் மிஞ்சும் அசுர வேக காற்று....
சாய்ந்தாடும் மரங்களுக்கிடையில் காய்ந்துபோன உடைகளை கையில் எடுத்து வரச்சொல்லி அலறும் அம்மா.....
மிதிவண்டியே கதியென நனையாமல் நிற்க நாசுக்கான இடம் தேடும் அப்பா....
சுருங்கிய தோலோடு சுவர்களை தாங்கியபடி பதட்டத்தோடு படி ஏறும் பாட்டி.....
காலையில் மேய்ச்சலுக்காக கட்டவிழ்த்துவிட்ட கால்நடைகளை கட்டுத்தறியில் கட்டச்சொல்லி கத்தி கம்புஊன்றி நடக்கும் கைதளர்ந்த தாத்தா....
ஜன்னலருகே மின்னலை பார்த்தபடி மழை வருமா வராதா ஆராய்ச்சியில் ஆழ்ந்து போன அண்ணன்.....
அடிக்கும் காற்றுக்கு போர்வையை போர்த்தியபடி பொறுமையாய் அமர்ந்திருக்கும் அக்கா. ....
காகிதங்களை கிழித்து கப்பல் செய்து வந்து சேரும் மழைக்காக வ.உ.சி யாக மாறிய நான்...
பரபரப்புகளெல்லாம் பக்குவமாய் இயல்பானது கொட்டித்தீர்த்து குட்டை குளம் நிரம்பிய கனமழையால்.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
