வெண் நிலாவுடன் இரவு

தினவின் பயத்தைவிட
இருளின்பயம்
அதிகமாம் என்னவளுக்கு
ஒரு மெழுகுவர்த்தியாவது
அவசியம் என்கிறாள்
இன்று முதல்...

விழிகள் இமைக்காது
இலக்கணமாய் உருகி
தீபத்தின் ஒளியில்
அவளைப் படிப்பதும்
தமிழைப் படிப்பதும் ஒன்றுதான் எனக்கு...

நதியின் ஊற்றுபோல்
சுடர்விடும் புத்தொளியில்
என்னவள் தன்நிலையில்
இருக்கப்போவதில்லை
என்பதும் நிதர்சனம் தான்...

ஆதிமுதல் அந்தம் வரை
பால்வெளி கூட இருள்தான்
என்பதை அவளுக்கு எப்படி
உள்ளூர உணர வைப்பேன்...

எழுதியவர் : மேகலை (2-Aug-21, 4:16 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 174

மேலே