"எங்கடா போனான் அந்த..."
இளங்காலை பொழுது
சில்லிடும் தென்றல்
மேனி நனைத்திடும்
மெல்லிய பனித்துளி இலைகளில்..
குரலிசை கானங்களுடன்
குதூகலமாய் பறவைகள்..
கருத்த மேனியதில்
மெல்லிய படலம்..
வர்ணம் பூசப்பட்டதோ
சிவப்பாய் அங்கங்கே..
வானிலும் கலவரமோ..
இருந்தாலும் இருக்கலாம்,
சிலிர்த்து எழுகின்றன
தெருவெங்கும் மணல்கள்..
யாரோ அனுமதியின்றி
அபிஷேகித்தார்களாம் சாணத்தால்..
உடலோடு ஒட்டிக்கொண்டதாம்
கழட்டமுடியலயாம் காய்ந்திட்டதாம்..
உடம்பெங்கும் ஒரேவாடை
தாங்கலயாம் விடியற்காலையில்...
மேனியெங்கும் கலர்கலராய்
வர்ணங்கள் வாரியிறைக்கப்படுகின்றன..
எழில் கோலங்களாய்
வீடுதோறும் வீதியில்...
திருவிழாவோ என்னவோ?
முனுமுனுக்கின்றன மணற்துளிகள்..
தங்கள் உடலெங்கும்
சாயம் பூசிய கோபத்தில்
காக்கைகளும் சோம்பல்
முறிக்கின்றன சுகமாய்..
இன்னைக்கும் பறக்கனுமா
சோகத்தால் கொப்பளிக்கின்றன..
இன்று வழக்கத்திற்குமாறாய்
ஏதோவொன்று தொலைந்துள்ளதே..
என்னதது சிகந்திட்டமேனியில்
மீண்டும் கருப்புவர்ணம்..
எல்லாம் கூடின
அந்த அடர்ந்த கானகத்தில்..
ஒரே இருட்டு
என்ன செய்யலாம்..
பொழப்பே போச்சே
இன்னைக்கின்னு இப்படியா..
என்ப்ரோகிரம் எல்லாம்
டோட்டலி கான்செல்
முனுமுனுக்கிறது முயல்..
பறவைகளும் ஆமோதிகின்றன
அழகிய குரலில்..
அந்த வெள்ளைக்காரப்பயலால
எல்லாத்தோட வேலையேப்போச்சு..
இன்னும் முழிக்காம
என்ன பண்றான்..?
அங்கே கருத்தமேகத்திடம்
தூது அனுப்பபடுகிறது
இளங்காலை தென்றல்..
போனவள் திரும்பவில்லை
ஒரே சப்தம்
ஏதோ ரகளைபோல
எல்லாம் பேசிக்கொண்டன..
பேச்சுவார்த்தை தோல்விபோல..
யாரோ வெள்ளையனை
வெட்டி சாய்கின்றார்கள் போலும்
பளிச்சென்று வெடிக்கின்றதே..
பாவம் அழுகின்றான்
நம்மேனியே நனைகிறதே..
அழ அழ வெட்டுகிறார்களே..
பாவம் அவன்..
பகல் இருட்டாயிற்று
அன்றைய பொழுதில்..
மாலை வேளையது
கருத்த மேகங்கள்
வெள்ளையன் அழுகையால்
மாண்டன மறைந்தன..
பலத்த ரத்தக்காயத்துடன்
வெள்ளையன் அங்கே ..
அவன் முகமெங்கும்
கோரமாய் வெட்டப்பட்டு..
ரத்தம் ஆகாயத்தில்
அங்கங்கே ஒட்டி..
இறக்கும் தருவாயில்
இருக்கும் அவனை ..
மலைகள் மெல்லமாய்
தோள்களில் இறக்கி
பச்சிலை செடிகளில்
படுத்து உறங்கிட
அனுப்பி வைத்தன..
என்ன அதிசயம்
அடுத்தநாள் கிழக்கே
வழக்கம்போல் குளித்து
காயமில்ல மனிதனாய்
தங்க நிறத்துடன் தகதகவென
கதிர்களை பாய்ச்சிட
ஒரே ஆச்சர்யம்..
எல்லாம் பேசிக்கொண்டன
நல்லவேளையா வந்தாண்டா
இன்னைக்கு இவனவெச்சே
எல்லாவேலைகளையும் முடிச்சிடனும்..
சுறுசுறுப்பானது பூலோகம்..
கதிரவனின் கதிர்வீச்சால்...