டீ கடைக்காரன் - அவன் ஒரு மென்டல்

கதை களம் - பெங்களூர்

எனவே ஆங்காங்கே கன்னட மொழியை - தமிழ் வார்த்தைகளாகவும் அதன் அர்த்தங்களும்!

நீங்கள் பெரு நகரங்களில் உள்ள பீ.ஜி எனப்படும் விடுதிகளில் " பெயிங் கெஸ்ட்" அதாவது "வாடகை விருந்தினராக" ஆக இருந்ததுண்டா ??

ஆம் எனில் "டீ" எனப்படும் தேநீரின் மகத்துவமும், முக்கியத்துவமும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஏனென்றால் அத்தகைய விடுதிகளின் விருந்தாளிகளுக்கு பெரும்பாலான காலி பாக்கெட் தருணங்களில், உணவுவே இந்த "டீ" தான்!

அட யாருடா இவன் ....

இருங்க ..இருங்க ...

நான் இங்கு பீ.ஜி யின் வாழ்க்கை பற்றியோ,டீ யின் பெருமை பற்றியோ பேச போவதில்லை.

நான் பேசபோவது ஒரு டீ கடைக்காரரை பற்றியும் அவர் தந்து போன ஒரு அழுத்தத்தை பற்றியும் தான்.

கதையின் முடிவில் உங்களுக்கும் அந்த அழுத்தம் பற்றியிருபின் ஆச்சரியமல்ல!

2016 பெங்களூர்

நாம் பயணிக்கும் அனைத்து பாதைகளும் நம்மை இன்பத்தையும் , சந்தோசத்தையும் நோக்கி நம்மை வழிநடத்துவதில்லை.

அப்படி நான் தேர்ந்தெடுத்த ஒரு பாதை என்னை 540 நாட்களுக்கு மேல் முன்னேற முடியாமல் தேங்க செய்தது.

பல விராயமான நேரங்களாயும் நாட்களையும் பரிசாக தந்தது!

அப்படி ஒரு சோம்பேறித்தனமான காலையில் எழுந்தது 10.30க்கு !

விடுதியில் உணவு பாத்திரங்கள் காலியகி,கழுவி கவிழ்ந்து கிடக்க, காலை உணவின் அட்டவணையை சரி செய்ய நான் அனுதினம் செல்லும் டீயெனும் தேநீர் கடைக்கு சென்றேன்.

டீ கடையும் டீ கடைகாரரும் மாற்றம் கொண்டு இருந்த(து)னர்.

முதலில் டீ கடைக்காரரின் புற தோற்றமும் அலங்காரமும்

வயது - 40ஐ கடந்து..
உடை - வெள்ளை குர்த்தா,நீல நிற ஜீன்ஸ்..
காந்திய(யி)ன் குல்ல்வும் , நேரு காலணிகளும்...
முகம் முழுக்க தாடி ..
அதற்கு பழுப்பு நிற சாயம் பூசி இருந்தார்!!

கடையில் நான் கண்ட ஆச்சரியங்கள்

ஒன்று

"இங்கு புகையிலை பொருட்கள் விற்கபடுவதில்லை" என கையால் எழுதப்பட்ட வாசகம்!

இரண்டு

கடையில் கண்ணாடி காட்சி பெட்டிகளில் குடிசை தொழில் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்ட தின்பண்டங்கள்.

"ஜங்க் பூட்ஸ், கார்போரேடட் ட்ரிங்க்ஸ்" எனப்படும் கார்பொரேட் தினிப்புகளை காணவில்லை!!

மூன்றாவது

காட்சி கண்ணாடி பெட்டிகளின் மேல் வைக்கபடிருந்த இரண்டு தேநீர் குவளைகள். இரண்டிலும் தண்ணீர் தேநீர் துகல்கள்.

ஆச்சரியங்களை காட்டிலும் பசியின் மிகுதியால் உள்ளிருந்த கடைகாரரை நோக்கி "ஒந்து டீ கொடி" என்றேன் "ஒரு டீ குடுங்க" என அர்த்தம்.

உள்ளிருந்து என்னை நோக்கி வந்த அவர் "யென் சார் , யெனு பெக்கு" - "என்ன சார் என்ன வேணும்" என அர்த்தம்.

இனி சிறிது தங்லீஷ் லில்..

நான் மீண்டும் " ஒரு டீ " என்றேன்

"கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க கிளாஸ்களை ஸ்டெர்லைட் செய்து கொண்டு இருக்கிறேன்" என்றார்.

இது எனக்கு மற்றும் ஒரு ஆச்சரியம்!!
ஏனென்றால் அவர் கூறியது போல அடுப்பின் மேல் கொதிக்கும் தண்ணீரில் கண்ணாடி கிளாஸ்கள் சுடுநீராடிக்கொண்டிருந்தன!!

இடைப்பட்ட நேரத்தில் அவரை ஈடுபாட்டுடன் வைக்க நான் என் எண்ணத்தில் தோன்றிய கேள்விகளை ஈடுபாட்டுடன் அவர் முன் வைத்தேன்.

முதலில் கண்ணாடி காட்சி பெட்டிகளின் மேல் இருந்த கண்ணாடி குவளைகள் பற்றி..

அதற்கு அவர் அளித்த பதில்

"ஒன்று உண்மையான டீ தூள் ; மற்றொன்று விஷம்" என்றார்

என்ன விஷமா?? என்றேன்

ஆமா சார் கலப்பட டீ தூள் விஷம் தானே?? என்றார்
மேலும் தொடர்ந்தார்..
"நல்ல டீ தூள் என்பது கொதிநிலையில் நிறம் மாறும், கலப்பட டீ தூள் உடனே நிறம் மாறும்"

"உங்களை போல வரவங்க இதை தெரிஞ்சுக்கணும் இங்க வெச்சி இருக்கேன்" என்றார்

"நல்ல விளம்பர யுக்தி" என்றேன்

"இது விளம்பரம் இல்ல சார், விழிப்புணர்வு.

நான் (தொடப்பத்தை சின்னமாக கொண்ட கட்சியின் பெயரை கூறி) கட்சியின் உறுப்பினர்.

எங்களது கொள்கை அனைத்திலும் மக்களுக்கான நல்வாழ்வு , அனைத்திலும் விழிப்புணர்வு

ஆகவே தான் இந்த முயற்சி" ..என்றார்

இப்போதுதான் எனக்கு புரிந்தது

ஏன் குடிசை தொழில் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்ட தின்பண்டங்கள் "மட்டுமே"

புகையிலை பொருட்களுக்கு "இல்லை" என

மேலும் அவர் தொடர்ந்தார் "எங்களிடம் செறிவூட்டப்பட்ட குளிர்பானங்கள் இல்லை"

நாங்கள் பயன்படுத்தும் தேநீர் துகள்கள் விலை மிகுதி எனினும் நேரடியாக தேயிலை தோட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுபவை.

இல்லாதவருகும் , கைவிடபடவருகும் இங்கு என்றுமே தேநீர் இலவசம் தான்"
என்றார்.

நான் என் ஆர்வ மிகுதியால் அவர் காதில் கிசுகிசுத்தேன் " இங்கே போட்டி வியாபாரம் ஜாஸ்தி ஆச்சே , உங்கள் யுக்தியையும் சிந்தனையையும் மத்தவங்க என்ன... என நான் முடிக்கும் முன்னரே...

"ஆத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை சார், எனக்கு மக்களுக்கு நல்லதை மட்டுமே கொண்டு சேர்கணும்.
அது எண்ணமா இருந்தாலும் சரி !
கொள்கையா இருந்தாலும் சரி!!
டீ யா இருந்தாலும் சரி!!!

என முடித்தார்!!!!

ஸ்டெர்லைட் செய்யப்பட்ட கண்ணாடி குவளையில் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார்.
குடித்து முடித்து.. தேநீர்க்கு பணம் கொடுத்து நன்றி சொல்லி நகர்ந்தேன்.

எதிரில் ஒரு சலூன் கடையில் சென்று அமர்ந்தேன் சவரம் செய்துகொள்ள.

சலூன்காரர் அறியப்பட்டவர்.

"யென் சார் ஊட்டா ஆய்த்தா?? (என்னா சார் சாப்பாடு ஆச்சா) என்றார்.

இல்ல இப்போதான் எதிர் கடையில் "டீ" குடிச்சேன் என்றேன், டீ கடையை நோக்கி.

கணீர் என சிரித்தவர் "அவனொந்து மென்டல் சார்" (அவன் ஒரு மென்டல் சார்) என்றார்
டீ கடையை நோக்கி !!!

விடுதி அடைந்த நான் குளித்து முடித்தேன்.

எண்ணத்தில் கேள்வி கரையான்கள்!!

எனக்களித்த விளக்கங்களை தனி ஒரு வாடிக்கையாளருக்கு அளிப்பாரா "மென்டல்" என அறியப்பட்ட அந்த டீ கடைக்காரர்??

அல்லது இது அவரது அரசியல் கொள்கை பறைசாற்றலின் யுக்தியா??
இந்த கொள்கைகளால் அவரது வியாபாரம் தலைக்குமா?? நிலைக்குமா??

அனைத்தையும் தாண்டி ஓங்கி ஒலித்த ஒரு கேள்வி..

"அவன் மென்டல்லா ???? அவனா மென்டல்????"

- தினேஷ் ஜாக்குலின்

எழுதியவர் : தினேஷ் ஜாக்குலின் (3-Aug-21, 1:21 am)
சேர்த்தது : Dinesh Jacqulin
பார்வை : 207

மேலே