காதலின் கெளரவம்

நம் காதலை கண்ணியமாக
நம் வீட்டு பெரியவர்களின்
அனுமதி வேண்டி
தெரிவித்தோம் ...!!

ஆனால்..
நம் இரு வீட்டாரின்
வறட்டு கௌரவப்
பிரச்சனையால்
நமது புனிதமான காதல்
மணமேடை
ஏறும் வாய்ப்பை
இழந்து விட்டது ...!!

கவலை வேண்டாம்
கோழைபோல்
தவறான முடிவை
நாம் எடுக்க வேண்டாம் ...!!

துணிவே துணை என்று துணிந்து
திருமணம் செய்து கொண்டு
காதலின் புனிதத்தையும்
கௌரவத்தையும் காப்போம் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Aug-21, 9:09 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kathalin gowravam
பார்வை : 171

மேலே