இறைவன்

ஒளியாய் சூரியனாய் வந்து இருளை
எளிதாய்ப் போக்கும் இறைவன் ஒலியாய்
வந்து ஞானிகள் கேட்டு நம்மையேத்தும்
ஞானம் அத்தனையும் தந்தான் மறையாய்
இதைத்தான் பாரதி சொன்னான் ' கேட்கும்
ஒலியிலெல்லாம் நிந்தன் கீதம் இசைக்குதடா
நந்தலாலா ' என்றும், ' கள்ளமற்ற முனிவர்கள்
கூறும் கருணை வாசகத்துட் பொருள் ஆவாள்'
என்றும் இன்னும் இறைவன் இல்லை
என்று கூறுவார் குருடரா இல்லை செவிடறா ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Aug-21, 8:08 pm)
Tanglish : iraivan
பார்வை : 186

மேலே