பல மொழி ஒரு வழி

ஆங்கிலேயரிடம் வீழ்ந்தோம் அடிமையாக
ஆயினும் வாழ்ந்தோம் மிக ஒழுக்கமாக
இன்று திரிகிறோம் மிகவும் சுதந்திரமாக
ஆனால் ஒழுக்கம் சற்றே சீர்குலைந்ததாக.. (ஆங்கிலேயரிடம் வீழ்ந்தோம் அடிமையாக)

முதியோர்களின் பாதுகாப்பு மன உடல் மகிழ்ச்சி
தொழில் செய்ய நிர்பந்தமின்றி சிறுவர்கள் கல்வி
பெண்களுக்கு சமஉரிமை தந்து கொடுக்கும் மதிப்பு
பாலியல் பலாத்காரம் முற்றிலும் மறைந்த செழிப்பு
அதுவல்லவோ பெற்ற சுதந்திரத்தின் உயரிய சிறப்பு.. (ஆங்கிலேயரிடம் அடிமையாக வீழ்ந்தோம்)

முன்னேற்றப் பாதையில் முன்னேறி செல்கிறோம்
விவசாயதில் உன்னதமாகவே சாகுபடி செய்கிறோம்
தொழில் துறைகளில் நிறைய புரட்சி செய்கிறோம்
ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை படைக்கிறோம்
இவையனைத்தும் இன்ப சுதந்திரத்தின் பிரதிபலிப்பு.. (ஆங்கிலேயரிடம் அடிமையாக வீழ்ந்தோம்)

ஒரு வயிறுடன் பிறந்தாலும் இரு கைகளுடன் பிறந்தோம்
பல மொழிகள் இருப்பினும் நல்வழிகள் கொண்டுள்ளோம்
கன்னியாகுமரி நமது பாரத அன்னையின் பொற்பாதங்கள்
ஜம்முகாஷ்மீர் தாயின் காதில் மின்னும் மணிமகுடங்கள்

இந்திய மக்களாக இன்று ஒன்று சேர்ந்தோம்
அடிமை இல்லை என்று நினைவு கூர்ந்தோம்
ஒழுக்கத்துடன் கடமையையும் உணர்ந்தோம்
இந்திய ஒற்றுமை ஓங்குக என முழங்குவோம்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (14-Aug-21, 3:05 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 1823

மேலே