சுதந்திரம்
விடியலுக்குப் பெற்றோம் சுதந்திரம் நள்ளிரவில்
விடுதலைக்கு குடுத்த விலையோ அதிகம்
வீடு வாசலை இழந்தோர் பலர்
வீடுவாசம் போயி சிறைவாசம் பலருக்கு
வீழ்ந்தனர் தாயின் மடியில் பலர்
வரலாற்றில் அறிய பட்டோர் பலர்
வரலாற்றில் குறிக்கப் படாதோர் பலர்
விதியென்றில்லாமல் வீறு கொண்டு எழுந்தனர்
வெள்ளையனை வெளியேற்றிய பின்னரே உறங்கினர்
விண்ணையும் மண்ணையும் ஆளும் உரிமையை
விலையில்லாமல் தாரை வார்த்தனர் நமக்கு
வானுறையும் தெய்வமாம் புண்ணிய ஆத்மாக்கள்
வணங்கி அவரை துதிப்பதுவே அன்றி
வேறேதும் செஞ்சோற்றுக்கடன் இல்லை நமக்கு
வாழ்க பாரதம்!!! வாழ்க பாரதமாதா!!!
வாழ்க வீர சுதந்திர தியாகிகள்!!!
வந்தே மாதரம் !!! ஜெய் ஹிந்த் !!!