குவளைச் சாமியார்

குயவன் ஒருவன், செய்த பானைகளைக் கட்டிக்கொண்டு சைக்கிளைத் தள்ளியவாரே அருகில் உள்ள ஊர் சந்தைக்கு அயராது தள்ளியவாரே சென்றுகொண்டிருந்தான். ஆலமரம் ஒன்று வந்ததும் , சற்று ஓய்வெடுக்க அதன் கீழ் அமர்ந்தான்.
அங்கு வந்த சாமியார் ஒருவர், அம் மரத்தின் நிழலில் அமர்ந்து இக்குயவனை அழைத்தார்.
"என்ன சாமி" என்று குணிந்த வாரே சாமியாரின் அருகில் சென்றான்.
வாழ்க்கையின் சாராம்சம் ஒன்று சொல்கிறேன் கேள் என்று அவன் முன் இரு காலியான குவளைகளை வைத்தார். ஒன்றில் நீர் உற்றினார். மற்றொன்று காலியாகவே இருந்தது.
இவற்றில் ஒன்றை எடு என்றார்.
சில வினாடி யோசித்த குயவன், காலியான குவளையை எடுத்தான். தனது சட்டியின் ஒன்றில் இருந்து சாரயம் கொண்ட சட்டியை எடுத்து அதில் கொஞ்சம் ஊற்றினான். அருகில் இருந்த தண்ணீரை அதனுடன் கலந்தான். சுத்த சாராயம் கப்புனு தூக்கிரும் என்று சொல்லியவாரே குடித்து முடித்து விட்டு, நான் வரன் சாமி என்றவாரே சந்தை நோக்கி நடந்தான். ஆச்சரியம் கொண்ட சாமியார் அவனையே வியப்பாகப் பார்த்தார்.
எல்லோரும் எல்லா நிலையிலும் நாம் சொல்ல வரும் கருத்துக்களைக் கேட்பார்கள் என நினைக்கக் கூடாது ...
#siven81

எழுதியவர் : Siven81 (14-Aug-21, 9:27 pm)
சேர்த்தது : siven19
பார்வை : 64

சிறந்த கவிதைகள்

மேலே