உறவு

உறவு

தன்னை பெண் பார்க்க வந்த ரவி ஏதோ தனியாக பேச வேண்டும் என்று கூறியதை கேட்ட பிரியா பதட்டமானாள்.

"மிஸ் பிரியா, நான் சொல்வதைக் கேட்டு உங்களுக்கு கோபம் வரலாம், ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும் இந்த பெண் பார்க்கும் படலத்தில் எனக்கு விருப்பமில்லை.

உங்களிடம் எந்த குறையும் இல்லை ஆனால் நான் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறேன் கடந்த ஆறு மாதமாக. அது வேறு யாருமில்வை உங்கள் தங்கைதான்.

அவன் பேசுவதை கேட்க கேட்க இவள் முகம் மலர்ந்தது நல்ல வேளை நான்
கடந்த ஒரு வருடமாக உங்கள் தம்பியை காதலித்துக் கொண்டிருக்கிறேன் என்ற உண்மையை எப்படி சொல்லி கல்யாணத்தை நிறுத்துவது என்று நினைத்திருந்தவள், தன்னை மறந்து சிரிதது விட்டாள்.

எழுதியவர் : (13-Aug-21, 7:17 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : uravu
பார்வை : 302

மேலே