கவிதைத் தவறா காதையறு
காதையறுப் பார்களாம்
எண்சீர் விருத்தம்
காய். காய். மா. மா அரையடிக்கு
குட்டுதற்குப் பிள்ளைப்பாண் டியனோ யில்லை
குரும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி
எட்டினமட் டறுப்பதற்கோ வில்லை யில்லை
யிரண்டொன்றா முடித்துதலை யிறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்த னில்லை
விளையாட்டாய்க் கவிதைதனை விரைந்து பாடித்
தொட்டுதற்கோ வறிவில்லாத் துரைக ளுண்டு
தேசமெங்கும் பலவரெனத் திரிய லாமே
அந்தக் காலத்தில் போட்டிகளில் இலக்கணம் தவறி பாடுபவர்களைத
தலையில் குட்டுவாராம் பிள்ளைப்பாண்டி என்னும் புலவர்.
வில்லிபுத்தூர் ஆழ்வார் காலத்தில் தவறுதலாக பாடுவரின் காதை
துறடுகோலால் இழுத்து அறுப்பார்களாம்
ஒட்டக் கூத்தன் காலத்தில் தவறாய் பாடுபவரை சிறையிலடைத்து
முடி வளர்ந்தபின் இருகுடுமிகளை முடித்து தலையை வெட்டிவிடுவார்களாம்
அந்த தண்டனைகள் இப்பொழுது மறைந்து போயின அதனால்
ஒட்டுதலிலா கவிதைகளை விரைவாக தப்பும் தவறுமாக பாடித்
தேசத்தில்திரிநது கொண்டிருக்கும் துரை மார்கள் இன்று உண்டு
என்று அக்காலத்திலேயே ஒரு புலவர் பாடியுள்ளார் பாருங்கள்.
.......