வெண்கோடு இரண்டிற் கிடையில் ஓரெழில்திருச் செங்கோடு

வெண்கோடு இரண்டிற் கிடையில் ஓரெழில்திருச் செங்கோடு
வெண்கோடு மூக்கிலேந்தி நிலம்மீட்டான் இரணியன் போரோடு
எண்ணெழுத்து நாயகன் நாமம் நெஞ்சில்நீ தரித்திடு
வண்ணக் காரெழில் கண்ணனேநம் வாழ்வுக்குப் பற்றுக்கோடு !

௧. அடி ஒன்று
----வெண்கோடு ---வெள்ளைக்கோடு
----திருச்செங்கோடு ---சிவப்புக் கோடு
முதலடி திருமால் நெற்றியில் துலங்கும் முக்கோட்டு நாமம்

௨ . அடி இரண்டு
---வெண்கோடு --வெள்ளைக்கொம்பு
இரணியன் --இரணியாட்ச்சன் உடன் போரிட்டு பூமியை தன் கொம்பில் ஏந்தி மீட்டு வந்த வராக அவதாரப் பாகவதக் கதை

௩ . அடி மூன்று
----எண்ணெழுத்து --எட்டு அட்சரம் --நமோ நாராயண
திருமாலின் அஷ்டாச்சர நாமம் அல்லது பெயர்
சிவனுக்கு பஞ்சாட்சரம் ---நமசிவாய
இருவர் ஆலயங்களிலும் சென்று வணங்கினால் நமக்கு வழங்குவர்
பஞ்சாமிர்தம் ---FIVE FRUIT பிரசாதம்

௪ அடி நன்கு
--பற்றுக்கோடு ---கோடு -கொம்பினை தழுவி கொடி படர்ந்து
வாழும் . அதுபோல் கண்ணன் நமக்குப் பற்றுக்கோடு

---கவிதை பாவினம் கலித்துறையைச் சேரும்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Aug-21, 10:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 26

மேலே