புளிச்சிறுகீரை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தேகசித்தி யாகுஞ் சிறுகாசம் மந்தமறும்
போகமுறும் விந்துவும்நற் புஷ்டியுண்டாம் - வாகாம்
வெளிச்சிறுமான் நோக்கு(ம்)விழி மென்கொடியே நாளும்
புளிச்சிறு கீரையுண்ணும் போது
- பதார்த்த குண சிந்தாமணி
சிற்றிருமல், மந்தம், இவற்றை நீக்கி காயசித்தியையும் புணர்ச்சியில் விருப்பத்தையும் வீரிய விருத்தியையும் உண்டாக்கும்