ஒளவை கொடுத்த விருந்து

ஒளவை கொடுத்த விருந்து

கலித்தாழிசை

திங்கட் குடையுடைச் சேரனுஞ் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துநின் aறார்மணப் பந்தலிலே
சங்கொக் கவெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்து
நுங்குக் கண்முற்றி யடிக்கண் கறுத்து நுனிசிவந்து
*******பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே

ஒரே எதுகையுடன் நான்கு நெடிலடி கொண்டது
நான்காவது அடியில் பத்து சீர்கள் வந்தது அதை
இரண்டு அடிகளாக மடக்கி எழுதப் பட்டுள்ளது
ஈற்றடி அளவிர் அதிகமாக வருவது கலித்தாழிசையின்
இலக்கணமாகும்.

பாரியின் மகளிற்கு மணம் செய்வித்த ஒளவையார்
இந்த யேழை கொடுக்கும் உணவை அருந்திச்செல்ல
வேண்டும் என்று சேர சோழ பாணடியர் மன்னர்களுக்கு
அன்பாக சொல்ல. மூன்று மன்னர்களும் இந்த ஒளவை
என்ன கொடுப்பார் என்று நினைத்து பன நுங்கு இல்லாத
அந்த காலத்தில் குறும்பாக ஒளவையே எங்களுக்கு பனம்
நுங்கு வேண்டுமென்று கேட்க.... ஒளவையார் உடனே அங்கு
வீட்டு அடுப்புக்கு விறகாக வெட்டிப் போட்டிருந்த m
பனந்துண்டுகளைப் பார்த்து " ஏ பனந்த் துண்டு களே இங்கு
வந்திருக்கும் மூன்று மன்னர் படைக்கு ஆளுக்கு மூன்று
நுங்குகள் வரும்படி செய்யுங்கள் என்றவுடன் பனந்த் துண்டுகள்
எழும்பி நின்று பனை ஓலைகள் சரசட வென்ற சப்த்ததுடம்
வளர்ந்து நுங்குகள் காய்த்துத் தள்ளியதாம மூவேந்தர்களும்
வெட்கித் தலை குனிந்தார்களாம்.

எழுதியவர் : பழனி ராஜன் சேர்த்தது (16-Aug-21, 9:08 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 45

மேலே