ஒளவை பிறந்த வுடனே பேசியது
நேரிசை வெண்பா
இட்டமுட னென்றலையி லின்னபடி என்றெழுதி
விட்டசிவ னுஞ்செத்து விட்டானோ -- முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவ னுக்கன்னாய்
நெஞ்சமே அஞ்சாதே நீ
பகவனென் கிறமுனிவருக்கும் ஆதி என்கிற பெண்மணிக்கும
பெறியோர் பார்த்துத் திருமணஞ் செய்வித்தார்கள். அந்த ஆதி
என்கிற பெண்மணிக்கு வெகுநாள் திருமண மாகாமல் இருந்தத்து.
திருமணத்திற்கு முன்பாகவே பகவ முனிகள் நீ உனக்குப் பிறக்கும்
குழந்தைகளை எங்கு பெற்று எடுக்கிறாயோ அந்த இடத்திலேயே
விட்டுவிட்டு என்னை தொடர்ந்தால் என்னோடு வாழலாம். குழந்தை
வேண்டுமென்று நீ விரும்பினால் அந்த இடத்திலேயே உன்னை
விட்டு விட்டுப் போய் விடுவேன். நீ என்கூட வாழ முடியாது என்ற
நிபந்தனையினபேரில் மணம் செய்துகொண்டாராம். அவர்களுக்கு
மொத்தம் எட்டு க்குழந்தைகள் பிறந்ததாம். எல்லாக் குழந்தகளையும்
ஆதி என்பாள் பெற்ற இடத்திலே போட்டுவிட்டு புருஷனுடன் சென்று
விடுவாளாம்.
முதல் குழந்தயாக ஒளவையார் பிறந்தாராம். முதல் குழந்தை என்பதால்
ஆதியென்பாள் விட்டுச் செல்ல மிகவும் தயங்கி பகவனிடம் மன்றாடிக்
கேட்க பகவன் குழந்தையுடன் வராதே என்று தீர்த்துச் சொல்லிவிட்டாராம்.
அப்போதே அந்த சிசுவான ஒளவை கீழ்கண்ட வெண்பாவைப் பாடித்
தன்னுடைய அன்னைக்கு தைரியம் சொன்னதாம். பாட்டைப் படியுங்கள்
இஷ்டப்படி எனக்கு என்ன என்ன நடக்கும் என்று எழுதிய சிவனும்
செத்துவிட்டானோ. உனது புருஷன் ஒரு சன்யாசி நானுன்னுடன் வருவது
அவருக்கு பாரமல்லவா. . எனக்கு என்ன பஞ்சமும் நேர்ந்தாலும்நீ கவலையோ
பயமோ கொள்ளாதே எல்லாம் விதிப்படி நடக்கும் என்று பிறந்த வுடனே ஒளவை
இப்படி பேசினாராம்.
தகவல் விநோதரச மஞ்சரி. புத்தகம் பக்கம் 340