மனிதனாக வாழ்கிறேன் பக்குவத்தோடு

உயிரின் மதிப்பை உணரவைத்த உறவே
மனதிற்கு அமைதி தந்த உறவே
மனம் போல் மகிழ்ச்சியாக வாழ வழி சொன்ன உறவே
மன கசப்புகளை நிமிடத்தில் மாற்றும் மாய உறவே
எனக்கு ஒரு வலி என்றால் உடனே ஓடிவரும் உறவே
பிறர் மத்தியில் என்னை விட்டுக் கொடுக்காமல்
பேசும் உயர்வான உறவே
அன்பையும் பாசத்தையும் விலை கொடுத்தாலும்
வாங்க முடியாது என்பதை உணர்த்த வந்த
என் அன்பு உடன்பிறப்பே உன்னால்
இன்று நான் மனித நேயம் உடைய
மனிதனாக வாழ்கிறேன் பக்குவத்தோடு.

எழுதியவர் : முத்துக்குமரன் P (22-Aug-21, 2:06 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 279

மேலே