காற்று வந்தது
காற்று வந்தது
அசையும் மர கிளைகள்
உதிரும் பழு இலைகள்
தூவும் பூவிதழ்கள்
சாயும் புல் நுனிகள்
தவழும் குப்பை காகிதங்கள்
சுழன்று நகரும் தூசி வளையம்
பறக்கும் சேலை முந்தானை
ஆடும் ஜன்னல் திரை சீலை
கண்ணில் விழும் மண் தூசி
ஓ " காற்று வந்தது