அரசியல் நாடகம்

அரசியல் நாடகம்

சாதியால் உயர்ந்தவன்
சாதியில்லை என ஓதிடுவான்.

பணத்தால் உயர்ந்தவன் சோஷலிசம் பேசிடுவான்.

இருவரும் சேர்ந்தே
அரசியல் கூத்திடுவார்.

இதைப் பார்க்க
கூடி இருந்த மக்கள்,

" மாடாக உழைத்து உணவளித்து,
மாண்ட உழவனை
மறந்திட்டே " மகிழ்நதே ஆர்ப்பரிப்பார்.

ஆனால்,

இமயமலை உச்சியில்
இமயவனும் இமயவளும்
இதைப் பார்த்தே சலித்து
இடம் மாறிப் போய்விட்டார்.

இதை அறிவாரோ இவர்கள்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (22-Aug-21, 9:42 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : arasiyal naadakam
பார்வை : 41

மேலே