பிரச்சனை பிரச்சனை தீராத பிரச்னை

பிரச்சனை பிரச்சனை
பிரச்சனையா;
பிடிவாதம் பிடித்தே ஒட்டிக்கொள்ளும் பிரச்சனையா;
பிரியாத பிரச்சனையா;
புரியாத பிரச்சனையா;
பிடிவாதம் பிடிக்கும், பிரச்சனையா;
பின்தொடர்ந்தே வரும் பிரச்சனையா.

விடாத பிரச்சனையா;
விரட்டியே வரும் பிரச்சனையா;
விட்டுப்பிரியாத பிரச்சனையா.

பிரச்சனை பிரச்சனை தான்;
நீ பிரச்சனையை பிரச்சனை என்று நினைக்கும் வரை;
பிரச்சனை பிரச்சனை தான்;

வீட்டுக்கு வீடு பிரச்சனை;
வெளியோ சொல்ல முடியாத பிரச்சனை;
விடை தேடினாலும் பிரச்சனை;
விடைதேடா விட்டாலும் பிரச்சனை;
விடுதலை இல்லா பிரச்சனை
வீண் பிரச்சனை;
விபரிதத்தைத் தரும் பிரச்சனை;

பிரச்சனை பிரச்சனை
சொல்லமுடியாத பிரச்சனை;
சினம் கொள்ள வைக்கும் பிரச்சனை;
சிக்கலை உருவாக்கும் பிரச்சனை;
பிரச்சனையே பிரச்சனை;
பிரச்சனைமேல் பிரச்சரனை;
பிரச்சனைக்குள் பிரச்சனை;
பிச்சிக்க வைக்கும் பிரச்சனை;
பிடுங்கள் பிடித்த பிரச்சனை.

சிரித்தாலும் பிரச்சனை;
அழுதாலும் பிரச்சனை;
அழைத்தாலும் பிரச்சனை;
உழைத்தாலும் பிரச்சனை;
மலைத்தாலும் பிரச்சனை;
முறைத்தாலும் பிரச்சனை;

சிறுசோ பெருசோ!
பிரச்சனை பிரச்சனைதான்;
சீறிப்பாயிது இந்த பிரச்சனை.

சீ சீ இந்த பிரச்சனை
சித்திரவதை செய்யும் பிரச்சனை;
சினத்தை மூட்டும் பிரச்சனை;

தேடிவரும் பிரச்சனை;
தெரிந்தும் தெரியாத பிரச்சனை;
தெரியவில்லை ஏன் இந்த பிரச்சனை.

முடியவில்லை பிரச்சனை;
மூர்க்கத் தனமான பிரச்சனை;
முட்டுக்கட்டைபோடும் பிரச்சனை;
முட்டாளாக்குது இந்தப் பிரச்சனை.

இந்தப் பிரச்சனை;
அந்தப்பிரச்சனை;
வந்தபிரச்சனை; போனபிரச்சனை;
சொந்தப்பிரச்சனை;
பந்தப் பிரச்சனை;
எங்கும் பிரச்சனை;
எதிலும் பிரச்சனை;
எடுத்துச் சொன்னாலும் பிரச்சனை;

நல்லது கெட்டது நடந்தாலும் பிரச்சனை;
நாளும் கிழமையிலும் பிரச்சனை;
நல்லது சொன்னாலும் பிரச்சனை;
நமக்கேன் என்று இருந்தாலும் பிரச்சனை.

உன் பிரச்சனை;
என் பிரச்சனை;
உன்னால் பிரச்சனை;
என்னால் பிரச்சனை;
அவனால் பிரச்சனை;
நம் பிரச்சனை;
ஊர்பிரச்சனை;
நாட்டுப்பிரச்சனை;
சட்ட ஒழங்கு பிரச்சனை;
சுற்றுப்புற சுகாதார பிரச்சனை;
எல்லைப்பிரச்சனை
எவனுக்குத்தான் இல்லை பிரச்சனை.

பிரச்சனை பிரச்சனை தான்
பயந்தால் பயமுறுத்தும் பிரச்சனைதான்;
சிரித்துக்கொண்டே
பிரச்சனையை அனுகிடு;
பிரச்சனைக்கு தீர்வு நீயே தான்;

சிறிய பிரச்சனை
பெரிய பிரச்சனை
தீர்வு காணமுடியாத பிரச்சனை;
தொடர்ந்து வரும் பிரச்சனை
உன்மையில் உனக்கேன் இத்தனை பிரச்சனை.

ஆஸ்பத்திரிக்கு போனால் வைத்தியர் கேட்பதும் என்ன பிரச்சனை;
அடுத்தவீட்டுக்காரன் வந்தே கேட்பான்
என்னபிரச்சனை;

ஆபிஸ்போக பிரச்சனை;
போனால் பிரச்சனை;
அடிபிடி சண்டையிலும் கேட்பர் என்ன பிரச்சனை;

பிரச்சனை பிரச்சனை;
அய்யய்யோ இது என்ன பிரச்சனை.

சும்மா இருந்தாலும் பிரச்சனை.
சுற்றித் திரிந்தாலும் பிரச்சனை;
சொந்த பிரச்சனை; சொந்தக்காரன் பிரச்சனை;
சொத்துப்பிரச்சனை;
சுற்றி சுற்றி வரும் பிரச்சனை;
சும்மா இருக்காத பிரச்சனை;
அம்மம்மா போதும் போதும் பிரச்சனை;

அடக்கு முறையால் வருவது பிரச்சனை;
அடம் பிடிக்கிது இந்த பிரச்சனை;
அடுக்கடுக்காய் வரும் பிரச்சனை.

போக பிரச்சனை;
வர பிரச்சனை;
போகமுடியாத பிரச்சனை;
வரமுடியாத பிரச்சனை;
பார்க்க முடியாத பிரச்சனை;
பேச முடியாத பிரச்சனை;
தீர்வு காணமுடியாத பிரச்சனை;
திரும்ப திரும்ப வரும் பிரச்சனை;
முன்னால் போனால் பிரச்சனை;
பின்னால் போனால் பிரச்சனை;
குழந்தையால் பிரச்சனை;
குடும்ப குழப்பத்தால் பிரச்சனை;
வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை
வெறும் கையுடன் வீடு திரும்பினால் பிரச்சனை.

மீனவர்பிரச்சனை;
மாணவர் பிரச்சனை;
வண்டியை விட்டுவிட்டால் பிரச்சனை;
வண்டி நின்று விட்டால் பிரச்சனை;
வழியெல்லாம் பிரச்சனை;
வந்தே ஒட்டுது இந்த பிரச்சனை;
லஞ்ச ஊழல் பிரச்சனை
லாபம் சம்பாதிப்பதில் பிரச்சனை.

உட்கார்ந்தால் பிரச்சனை;
நடந்தால் பிரச்சனை;
நின்றால் பிரச்சனை;
சாப்பிடமுடியாமல் பிரச்சனை;
தூங்க முடியாமல் பிரச்சனை;
தூக்க முடியவில்லை இந்த பிரச்சனைகளை.

மூச்சிவிட பிரச்சனை
நொடிக்கு நொடி பிரச்சனை;
நொந்து போக வைக்குது பிரச்சனை.
பிரச்சனையை கண்டு பிடிக்க பிரச்சனை;
பிரச்சனைகளை சமாளிப்பதில் பிரச்சனை;
பட்டியல் இட்டால்
பக்கம் பக்கமாய் போகுது பிரச்சனைகள்.

வாய்ப்பைத்தேடுவதில் பிரச்சனை.
வாழ்க்கையே பிரச்சனை.
வாயைத் திறந்தாலே பிரச்சனை.
பிறப்பு முதல் இறக்கும் வரை
பிரச்சனை, பிரச்சனை, பிரச்சனை.

எல்லாம் பிரச்சனை;
எதிலும் பிரச்சனை;
எதிர் வீட்டில் பிரச்னை;
வீடு தேடுவதில் பிரச்சனை;
தேடிய வீட்டுக்குள் குடிபோக பிரச்சனை;
சம்சாரப்பிரச்சனை;
மின்சார பிரச்சனை;
வீட்டுக்குள் பிரச்சனை;
விடிய விடிய பிரச்சனை;
சாதிசண்டை பிரச்சனை;
விலைவாசி பிரச்சனை;
வியாதியால் பிரச்சனை;
வயோதிகத்தால் பிரச்சனை;
விரக்தியால் பிரச்சனை;
விடலைப்பருவத்தில் பிரச்சனை;
வியாபாரத்தில் பிரச்சனை;
விடிந்த உடனே பிரச்சனை;
விடிவு காணமுடியாத பிரச்சனை;
முடிவில்லாத பிரச்சனை;
முந்திவரும் பிரச்சனை;
ஓயாத பிரச்சனை;
ஓடி ஓடி விரட்டும் பிரச்சனை.


பிரச்சனை பிரச்சனைதான்;
பிரியாது தொடரும் பிரச்சனைதான்.

சரியாகப் பார்த்தால்,
சமாளிக்கப்படக் கூடியது பிரச்சனைகள் தான்.

சோர்வு இல்லாத மனிதன் இல்லை;
தீர்வு இல்லாத பிரச்சனைகள் இல்லை;
வாழ்க்கை என்றால், பிரச்சனைதான்.
வாழத் தெரியாதவனுக்கு பிரச்சனையும் வழக்குத்தான்.

வழக்கமாய் வருவது பிரச்சனைதான்.
வழுக்கி விழாது பாது காத்துக்கொள்வது;
உனது சாதுர்யம் சாமர்த்தியம் தான்.

திரும்பிப்பார் திரும்பிப்பார் திடமாக திரும்பிப்பார்;
திட்டமிட்டு செயல்பட்டுப்பார்;
சரியாய்ப்பார்;
சவாலாய் ஏற்றுப்பார்.

சிச்கல் சிக்கல் என்று நினைத்தால் சிக்கல் தான்;
சிக்கித் தவிப்பது மனித இனம் தான்.

விழிப்புடன் இரு;
விழுந்தது போதும்;
அடங்சி பயந்து இருந்ததும் போதும்;

பிரச்சனைகளை. பிடிவாதத்துடன் அணுகிவிடு;
முடங்கிக்கிடக்காது;
முயற்சியை எடு;
முழுமையாக சிந்தித்து செயல்படு;
பிரச்சனை பிரச்சனைதான்;
பிரச்சனையை பிரச்சனையாக்காது;
பிரச்சனைகளை; புரிந்துகொள்ள முயலு.

சோதனையை சாதனையாக்கு;
சோர்வு உற்றால் வேதனைதான்;
சோம்பேரியிடம் சுமகமாய் வந்து தொத்தும் பிரச்சனைகள் தான்.
பள்ளம் மேடு பார்த்து பயணம் செய்திடு;
பார்வையால் பயத்தை விரட்டிடு;
உள்ளத்தை திடமாய் வைத்திடு
உன்னுள் கிடக்கும் சக்தியை முழு மூச்சாய் பயன் படுத்திடு;

புரியாத வரைதான், பிரச்சனை பிரச்சனை;
புரிந்துவிட்டால், பிரச்சனை பிரசாதம் தான்;
கள்ளம் கபடு இல்லாமல் செயலைச் செய்திடு;
கட்டாயம் மனம் போன போக்கில் போகாது;
கண்மூடித்தனமாய் இருக்காது
கவனமாய் செயல்படு.

சூழ்ச்சிகள் இருந்தாலும்
சூசகமாய் இருந்து,
சுகமாய் வாழ்ந்திடு;
சொந்த நம்பிக்கையோடு செயல்பட்டுவிடு;
சுவாரசியமாய், சிரித்துக்கொண்டே;
பிரச்சனையை அணுகிடு.

பயம் பயம் என்று இருந்தால்,
பிரச்சனையும் படர்ந்திடும்,
பயம் பாய்ந்து வந்தே தொத்திடம்.

பழகி பழகிப் பார்த்தால், பழகிவிடும் பிரச்சனை.

விலகிச்செல்லாமல் பிரச்சனையை;
விவரமாய் முயற்சி எடுத்திடு;
விடுதலை உண்டு எனது உனது பிரச்சனைகளுக்கு.

எழுதியவர் : (22-Aug-21, 10:14 pm)
பார்வை : 270

மேலே