தமிழும் சமஸ்கிருதமும்

கலித்துறை

பழமும் தமிழென் றுசொல்லிட பாலும் சமஸ்கிருதம்
வழக்கில் சமஸ்கிரு தமில்லையென்றே சொல்வார் பொய்யாமே
பழந்தின் னியறி வாரிந்தி யெழுத்தும் சமஸ்கிருதம்
குழம்பும் வடக்கின் மொழிமுக்கால் சமஸ்கி ருதமாமே

தமிழ் மட்டுமே கலப்பில்லா மொழியாம் .கன்னடம் பாதி சமஸ்கிதம் தெலுங்கு பாதி தெலுங்கு
பாதி சமஸ்கிருதம் ____ மலையாளத்தில் பாதி சமஸ்கிருதும் பாதி சுத்தத்தமிழ் கொஞ்சம்
கொச்சை மொழி

அன்று தமிழ் பழமென்றால் சமஸ்கிருதம் பாலாக இரண்டும் சேர்ந்து பால்பழமாக
இனித்தது. பாலுள்ளே தயிர் வெண்ணெய் மோர் இருப்பது போல சமஸ்கிருத எழுத்துக்கள
தமிழில் இருக்கிறது. சமஸ்கிருத மொழி நமக்குத் தேவையில்லை. ஆனால் சில சமஸ்கிருத எழுத்துக்கள்
நமக்கு கண்டிப்பாய் தேவை படுகிறது. அதை நீக்கிடத் தமிழ் தடுமாறும். . . வெண்ணெய் எடுத்த
பால்போல தமிழ் அங்கங்குத் தடுமாறும்.

ஶ்ரீநிவாஸன் கஸ்தூரி பிரஸாத் கண்ணதாஸன் பெரியார்தாஸன் முருகதாஸ் அண்ணா துரை
karunaa nidhi. dhi (தி) தமிழில் இல்லை (,thi) தி தமிழில் உண்டு. நிதி என்பதே வட
மொழயாம்.
ஷண்முகம் கஜபதி ஶ்ரீபதி லக்ஷ்மன் கணேஷ் போன்ற பலதும் தமிழில் உச்சரிக்க முடியாத
தாகிப் போகும். kasthoori கச்தூரி யாகும் ganesh நாம் kanech என்றும் ஷண்முகம் என்பதை
chanmukam என்றே சொல்ல வேண்டும் கருணா நிதி (dhi. தி) தமிழில் கிடையாது அண்ணா
துரை (dhurai துரை) தமிழில் இல்லை துரை (thurai) உண்டு
ஶ்ரீநிவாஸனை (cheenivaachan:) என்பதே சுத்தத் தமிழாம். . ga sha sa ja ha என்பதெல்லாம்
தமிழில் உச்சரி முடியாதென்றே முன்னோர்கள் ஹ க்ஷ் ஸ ஜ ஶ்ரீ என்ற நான்கைந்து
சம்ஸ்கிருத எழுத்துக்களை மட்டும் கையாண்டு வந்தார்கள்.. அந்த எழுத்துக்களை நீக்கிட
தமிழில் ஆங்கில அரபு லத்தின் பிரெஞ்சு ஜெர்மன் போன்ற மொழிக்காரர் பெயர்களையோ
பொருட்களின் பெயர்களையோ கண்டிப்பாக சரியாக உச்சரிக்க வோ எழுதவோ முடியாது.

இதெல்லாம் படித்தவர்களுக்கு தெரியும் வடமொழியில் க என்பது 4 க வாம் 1.க n2.க்ஹ
3. கஹ 4.க்ஹ இதேபோல் ச. வுக்கு 4 ம் த. வுக்கு 4 ம் ப. வுக்கு. 4 ம் உண்டு.
இந்த வசதி தமிழில் கிடையாது. ஒன்றும் தெரியாதவரே தமிழில் எல்லா உச்சரிப்பும் உள்ளன என்று
அறியாமையால் மற்றும் தங்கள் மொழியை உயர்வு படுத்தும் நோக்கில் தெரிந்தும்
வீண் வாதம் செய்கிறார்கள். தமிழுக்கு ஒரே பெருமை உலகில் எந்த மொழிக்கும்
" ழ. " எழுத்து கிடையாது. அந்த சிறப்பெழுத்தையும் தமிழர் யாரும் நன்றாய் உச்சரிப்பது
கிடையாது. அதே சமத்தில் ள வரும் இடத்தில் தேவையின்றி. ழ. வைப்போடுகிறார்கள்.
சமஸ்கிருத 5 எழுத்தை நீக்கிட தமிழ் சரிபட்டு வராது. என்பதே உண்மை

?......

எழுதியவர் : பழனி ராஜன் (23-Aug-21, 12:17 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 50

மேலே