கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்
உங்கள் வாழ்க்கை ஒரு
வெள்ளை தாளாக
ஏற்றுக்கொண்டீர்கள் என்றால்
அதில் வரைந்திருக்கும்
சித்திரங்கள் எல்லாம்
கிறுக்கல்களாகத்தான்
தெரியும்
யாருக்கும் இது
என்ன படம்
என்று புரிவதில்லை
காரணம்
மறைந்து போனவர்கள்
வாழ்ந்து வரைந்து விட்டு
போன வாழ்க்கை
சித்திரங்கள்
இவை
நீங்களும் நானும் கூட
வெள்ளை தாளில்
சித்திரத்தை
வரைந்து கொண்டுதான்
இருக்கிறோம்
எதிர்கால சந்ததிகளுக்கு
இவை கிறுக்கல்களாகத்தான்
தெரியும்.
என்ன செய்வது?
உலகில் உள்ள
மக்கள் அனைவரும்
ஒரே மனநிலையிலா
இருக்கிறார்கள்
சித்திரத்தை அழகாக
ஒரே மாதிரி
வரைந்து விட்டு
போக !