காதலில் தோல்வி
காதலில் தோல்வி
மலர் தந்த மங்கை, மணமுடிக்க மறுத்து விட்டாள்,
கணவன் ஆக முடியுமோ!
காசு பணம் இல்லை
எனில் ?
அப்பாவிடம் கேட்டுப்
பார்த்தேன்,
அறை உண்டு வேண்டுமோ
என்றார்,
அண்ணனிடம் கேட்டுப்
பார்த்தேன்,
அடி உண்டு வேண்டுமோ
ஏன்றான்.
நண்பனிடம் கேட்டுப்
பார்த்தேன்,
நாளை வா நல்ல நாள்
என்றான்,
நாள் பார்த்துச் சென்ற
போது,
நா பிரண்டு போக
என்றான்.
கன்னி இவள் வேண்டாம்
என்றே!
காடு செல்ல யோசித்தேன்,
காட்டினிலே சிங்கம் புலி
என்று,
கடவுளிடமே சென்று விட்டேன்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.