தனிமை
நான் விளையாடிய மைதானம் எனக்கு நிரந்தரமில்லை.
நான் வலம் வந்த வீடு எனக்கு நிரந்தரமில்லை.
நான் சுற்றி திரிந்த ஊர் எனக்கு நிரந்தரமில்லை.
நான் கற்று கொண்ட பாடசாலை எனக்கு நிரந்தரமில்லை.
என் தோழி எனக்கு நிரந்தமில்லை.
என் தோழன் எனக்கு நிரந்தரமில்லை.
நிரந்தரமற்ற என் வாழ்வில்.
தனிமையை நிரந்தரமாகக் கொண்டேன்.