மழையே மழையே

மழையே....மழையே
வானம்பார்த்த பூமியில்
வேர்வை சிந்தி
விதை விதைத்தவன்
உண்ணாமல் உறங்காமல்
உன் வரவுக்காக
கண்ணீருடன்
காத்து நிற்கிறான் ...!!

மழையே ...மழையே
அந்த உழவனின்
கண்ணீரை நீக்கி
மண்ணில் உந்தன்
கண்ணீரை சிந்திவிடு ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Aug-21, 2:07 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 122

மேலே