இன்று போல் நாளை இல்லை

அழகிய தோற்றம் அற்புத வளர்ச்சி
என்னை பார்த்து நானே
மகிழ்ந்தேன் என்னுடன் என்னைப் போல் பல
தோழிகள் அவர்களும் நானும்
நாணத்தில் என்றும் நற்குணம் கொண்டவர்கள்
வளர்ந்து வரும் கன்னிகளாய் நாங்கள்
தலைகுனிந்து பார்ப்பவர் கண்கள் மயங்கும்
தோரணையில் பசுமையின் குளிர்ச்சியில் ,
ஆடி வரும் தென்றலிலே ஆடிப் படி
அசைந்தாடும் நடன மங்கையர்போல்
நாங்களும் எங்கள் தோற்றமும்,
எங்களுக்கு போட்டியாக
கரும் பச்சக் குளிர் நிறமாய் கோரைப்புல்லும்
எங்கள் அருகருகே காதலர் போல்
வளர்ந்து நிற்கும் வடிவழகும்
எம்மையும் கவர்ந்து கொள்ளும்
அது ஓர் அற்புதக் காதல் காலம்
நாங்களும் காதலர் தினத்தில்பண்ணிசைத்து
அகமகிழ்ந்து கட்டியணைத்து மகிழ்ந்து
வாழ்ந்திட்ட நொடிப் பொழுதெல்லாம்
நோக்குவர் கண்கள் நோக்குவதால்
நொந்து வாடி வதங்கி விதைத்தவன்
மனம் மகிழ அவனிடம் தஞ்சம் கொள்ளவோம்
இன்றுபோல் நாளை இல்லை
எங்கள் வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள்

எழுதியவர் : பாத்திமாமலர் (26-Aug-21, 1:01 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 141

மேலே