சண்டியூர் கண்ணகி

சண்டியூர் கண்ணகி.

அழகான கிராமம்
சண்டிலிப்பாய்.
அங்கு ஒரு கண்ணகி
அம்மன் கோவில்.
அவளுக்கு ஒரு கவிதை.

" காவல் தெய்வம் கண்ணகி
சண்டியூரை காவல் காக்க,
மாரி அவள் வந்து போவாள்
வயல் குளம் நிரம்பி வழிய.

கொக்குகளுக்கோ கொண்டாட்டம்,
கொத்தி கொத்தி மீன் பிடித்தனவாம்,

அதைப் பார்த்து மகிழ்ந்திருக்க,
அந்தி சாயும் நேரத்திலே,
அண்ணன் அவன் அங்கு செல்வான்,
என்னையும் கூட்டிச் செல்வான் .

கொக்குகளோடு
கொக்குகளாக,
சண்டியூர் கண்ணகியும்
எம் கண்ணில்
அங்கு தெரிவாள்,
அக மகிழப் பார்த்திடுவோம்."

ஆக்கம்
சண்டியூர் பாலன்

எழுதியவர் : சண்டியூர் பாலன் (26-Aug-21, 5:26 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 65

மேலே