மாட்டுக்கு ஒடம்பு சரியில்லையா
ஏன்டி காவேரி, உன்னோட மாட்டுக்கு ஒடம்பு சரியில்லையா?
@@@@@@
இல்லையே நல்லாத்தானே இருக்குது பெரியக்கா.
@@@@@@
அப்பறம் எதுக்கு கவ்(வு) (Cow). சிக்(கு) (sick)னு சொன்ன மாதிரி என் காதில விழுந்தது. 'கவ்'ன்னா மாடு. 'சிக்'குன்னா ஒடம்புக்கு முடியல இன்னு அர்த்தம்.
#########
இல்ல பெரியக்காஎங்க மாடும் கன்னுக்குட்டியும் நல்லாத்தான் இருக்குது. சாயந்திரம் அஞ்சு மணிக்கு நாந்தான் பால் கறந்துட்டு கன்னுக்குட்டியைப் பாலூட்ட விட்டேன். மாட்டுக்கு இப்பத் தீனி வச்சுட்டு வந்தேன்.
########
அப்பறம் எதுக்கு கவ்வு சிக்குனு சொன்ன?
@@@@@@
ஓ... அதுவா? எம் பேரன் பேரு கவ்வுசிக்கு.
@@@@@@
உம் பேரன் பேரு கவ்வுசிக்கா. என்ன பேருடி இது?
@@@@@@
நான் என்னத்த யக்கா கண்டேன். எம் மவன் வெளிநாட்டில இருக்கிறான். நேத்துத்தான் குடும்பத்தோட வந்திருக்கிறான். அவந்தான் எம் பேரன் பேரு கவ்வுசிக்குனு சொன்னான். அந்தப் பேரைச் சொல்லித்தான் எம் பேரனைக் கூப்புட்டேன்.
#######
அப்பிடியா? நல்லாப் பேரு வச்சாங்கடி பேரு.
@@@@@@@
நம்ம ஊரிலயும் எல்லாம் அர்த்தம் தெரியாத இந்திப் பேருங்களத்தான் யக்கா வச்சிருக்காங்க.
@@@@@
ஆமான்டி காவேரி. நீ சொல்லறதும் சரிதான்டி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Kaushik = sentiment of லவ்
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
தமிழ் உணர்வை வளர்ப்போம்