இளமையில் செய்த தவறுக்கு முதுமையில் தண்டனை

. இளமையில் செய்த தவறுக்கு முதுமையில் தண்டனை

நான் வசித்த கிராமத்தில் சிறுவயதில் நிகழ்ந்த சம்பவம். எனது வீட்டுக்கு அருகில் இருந்த பெரியவர் கதை. அவர் நான் சிறுவனாக இருந்தபோது வாலிப வயதில் இருந்தார். அவர் உடல் மிடுக்காகவும் ஆடைகள் நவீன ஸ்டைலுடனும் உடுத்துவார். அந்த வயதில் அவருக்கு அனைத்து தீய பழக்கங்களும் இருந்தன. மேலும் சிகரெட் புகைப்பதில் மன்னன்.
அவர் கொண்டு செல்லும் பொருள் மூட்டை முடிச்சாக இருந்தால் தூக்க மாட்டார் புதுமையான டீசன்டான பேக்கில் இருந்தால்தான் எடுத்து செல்வார். மிகவும் புதுமைகளை விரும்புபவர். திரைக்கு வரும் அனைத்து திரைப்படங்களையும் உடனே பார்த்துவிடுவார். பல விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர் பல பரிசுகளும் வாங்கியுள்ளார். சிகை அலங்காரத்தை அதிகம் விரும்புபவர்.
பெண்கள் மீது அதிக மோகம் உடையவர். திருமணம் ஆகி மனைவி இருந்தாலும் யார் சொல்வதையும்மதிக்காமல் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர் என் வீடு அருகில் இருந்ததால் அவரின் அனைத்துஅசைவுகளையும் நான் உன்னிப்பாக கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். அவர் இளமையில் இரத்தஓட்டத்தில் அடாத ஆட்டம் கொஞ்சநெஞ்சம் இல்லை ஆணவத்தில் கொடிகட்டி பறந்தார்.
எனக்கு வாலிபம் அவருக்கு முதுமை ஆரம்பித்தது. அவரது உடல் தளர்ச்சி அடைந்தன ஆனாலும் ஆசைகள் குறையவில்லை. முதுமை அவரை வாட்டத் தொடங்கியது அவர் வாலிபத்தில் செய்த தவறுகளால் வயிற்று பகுதியில் தீராத வியாதி உண்டானது அதனால் அவரால் உணவு சாப்பிட முடியவில்லை அப்படியே சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் வாந்தியாக வெளி வந்து விடுகிறது.

அவரால் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு சிரமமாக இருந்தது. உடல் உபாதையால் மிகுந்த அவதிப்பட்டார் அவரால் யாரிடமும் சொல்ல முடியாத துயரம் அனுபவித்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன ஆனாலும் அவரது வியாதி முடிவுக்கு வரவில்லை அதிகரித்தது அதனால் அவர் மனம் நொந்து ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மின்விசிறியில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை தான் நம் முன்னோர்கள் முற்பகல் செய்யின் பிற்பகல் வரும் என்பார்களோ. அவர் தனது இளமை காலத்தில் செய்த தவறுகளுக்கு முதுமையில் தண்டனை.

எழுதியவர் : முத்துக்குமரன் P (27-Aug-21, 9:44 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 143

மேலே