காசரைக் கீரையின் கயிறு - வெண்டுறை

காசரைக் கீரையின் தண்டையும் பிடுங்கி
பாசன வாய்க்கால் சேற்றில் பரப்பி
பூசனம் பிடித்து அழுகும் போதினில்
மாசிலா துதோலையும் உருவியே

கதிரவன் அனலில் உலரவே வைத்து
பதமாய் அதனையும் ஒன்றாய் சேர்த்தே
இதமாய் கையால் கசக்கினால் நூலென
மிதமாய் தோலும் மாறுமே

கிடைத்த நூலையும் கையால் திரித்தால்
உடையை உடலில் கட்டவே கயிறாகும்
தடையையும் ஆக்கிட தாம்பு கயிறாகும்
கிடாவைக் கட்டிட கயிறாய்.

மரத்துக் கட்டிலில் பின்னலாய் அதையுமே
திரித்துக் கட்டினால் உறங்கிட இதந்தானே
பருத்தி நூலினும் உறுதியாய் இருந்திடும்
அரிய நூலாம் காசரை.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Aug-21, 7:23 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 29

மேலே