சமுதாயம் வாழட்டும்

அழைப்பும்
விடுக்கவில்லை
அனுப்பவும்
முடியவில்லை !
வந்தவர்
தங்கி விட்டார் !

வேண்டா
விருந்தாளி
கொரானா
கொடும்பாவி
முற்றிலும்
அழியவில்லை !

ஆட்டிப்படைக்கும்
ஆட்கொல்லி
ஆணவத்துடன்
அலைகிறது !
அச்சத்தின்
அட்சரேகை
அனைவரின்
முகத்திலும்
தெரிகிறது !

வலுவிழந்து
தவிக்கிறது
வாழ்வாதாரம்
நாட்டில் !
உயிரற்ற
உடல்களாய்
உலவுகின்றனர்
உலகமக்கள் !

பொலிவிழந்த
பொருளாதாரம்
வளமிழந்து
வறுமைக்கோடு
வடிவமானது !
பணக்காரர்
ஏழையானார் !
வறியவர்
வாழ வழிதேடி
அலைகின்றார் !

உள்ளவனுக்கு
பாதிப்பில்லை
இல்லாதவனுக்கு
வாழ்வில்லை !
பரப்பிய சீனாவில்
பரபரப்பு குறையவில்லை
இயல்பும் மாறவில்லை !

ஏமாளிகள்
என்றும் நாம்
கோமாளிகள்
கோலோச்ச
கோமான்கள்
கொடிபறக்க
அடிமைகளாக
வாழ்கிறோம்
இன்றும் நாம் !

மீள வேண்டும்
மக்களும்
மீட்புப் பணிகள்
மின்னலென
நடக்க வேண்டும் !

சகஜ நிலை
விரைவில் திரும்பி
சமுதாயம் வாழட்டும்
உள்ளங்கள் மகிழட்டும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Aug-21, 2:32 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 366

மேலே