இராப்பசுவின் பால் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பகற்பசும்பால் காய்ச்சிப் பருகின் அழலும்
இகற்கபமும் ஈளையுமி ராவாம் - புகல்பித்த
வேகமும்போம் மேனியெல்லா மேனியிடுந் தாதுவுமாம்
போகமுமுண் டாகும் புகல் 1
- பதார்த்த குண சிந்தாமணி
நேரிசை வெண்பா
இரவின்பால் கண்ணில் எழுபிணிபோக் கும்பின்
பரவியநோ யும்போக்கும் பாரில் - விரகமுற்றார்க்
கத்தியம் பன்னவிழி யாயிழையே யாவருக்கும்
பத்தியமாம் என்றைக்கும் பார் 2
- பதார்த்த குண சிந்தாமணி
பகலிற் சுரந்து இரவில் கறக்கின்ற பாலால் தேக அழற்சி, கபநோய், சுவாசம், பித்த நோய், கண்நோய், விந்து தொடர்பு நோய்கள் இவை நீங்கும்; உடல் பொலிவு, விந்துப் பெருக்கம், மாதர் மீது விருப்பம் ஆகியவற்றை உண்டாக்கும்; பத்தியத்திற்கு உதவும்