பகற்பசுவின் பால் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’க’ ‘த’ வல்லின எதுகை)

பகற்பால் சிசுக்கட்குப் பக்குவமென் றாலும்
விகற்பமொடும் ஐப்பெருக்கு மெய்யே - எதற்குமிகத்
தீதடரச் செய்யுமித்தாற் சேராதுட் காய்ச்சலனல்
தாதவிழும் பூங்குழலே சாற்று

- பதார்த்த குண சிந்தாமணி

இப்பால் குழந்தைகட்குப் பக்குவமானதுதான்; ஆனால் பல விதமான கபநோய்களை உண்டாக்கும்; உடல் சூட்டையும் வெப்பத்தையும் உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Aug-21, 10:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே