பன்னீர்ச் செம்பு வெந்நீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பன்னீர்ச்செம் பிற்காய்ந்த பானீயம் விட்டருந்த
மன்னிய,சு வாச(ம்)விக்கல் மாபிரமை - பன்னரிய
பித்தசி லேஷ்மவளி பேசரிய தாளி(ன்)வலி
யித்தரையை விட்டகலு மெண்

- பதார்த்த குண சிந்தாமணி

பன்னீர்ச்செம்பில் காய்ந்த வெந்நீரால் இரைப்பு, விக்கல், சித்த பிரமை, முத்தோடம், தாளுபாக ரோகம் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Aug-21, 10:18 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே