சிறுமி
சிறுமி
பகலில்
அம்மாவின் கை பிடித்தே
அ , ஆ , ... எழுதிடுவேன்.
அப்பாவின் தோள் ஏறியே
வேடிக்கை பார்த்திடுவேன்.
அக்காளின் சட்டை போட்டே
வேடிக்கை காட்டிடுவேன்
அண்ணன் முடி கலைத்தே
குறும்புகள் செய்திடுவேன்.
தம்பியை கட்டி பிடித்தே
மகிழ்ந்திடுவேன்.
இரவில்
அப்பா அம்மா நடுவினிலே
தூங்கிடுவேன் நான்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.