தலை முறைச் சொத்து
கட்டளைக் கலித்துறை
மலையின்மிக் கானவ ரென்றாலுங் கர்வ மமதையுற்றால்
நிலைமைகெட் டோடுவ ரீடே றுவதில்லை நிச்சயமே
அலைகடற் றேங்கும் துரியோ தனன்செல்வ மத்தனையும்
தலைமுறைக் கும்வந்த கேடாகும் ரத்ன சபாபதியே
நாலுவித செல்வங்கள் அரசன் பொன் மணி நெல் என்ற மிதமற்ற செல்வங்களும்
நலுவித் அரண்களாகியமலை காடு மதில் நீரரண் மற்றும் சதுரங்க சேனைகளாகிய
ரத கஜ துரக பாதாதி களாகிய அகண்ட இராச்சியமும் கடல் போன்ற படைகள் வைத்திருந்தும்
துரியோதனனின் திரண்ட செல்வங்கள் அனைத்தும் அவன் மமதையும் கர்வமும் நிலைமை
மிகவும் சீர் கேட்டு ஈடேறமுடியாது அவனது தலைமுறைக்குதவாது போனது
..