அன்னைத் தாலாட்டு
ஆராரோஆராரோஆராரோஆராரோ
சீரார் பசுங்கிளியே தெவிட்டாத பசுந்தேனே
பேரார் குலக்கொழுந்தே பெருமாளே ஆராரோ-. ஆராரோ
இருகண் மணியே இலஞ்சியமே என்னுயிரே
ஒருகுடைகீழ் நீயிவ் வுலகாள வந்தவனோ -ஆராரோ
தெள்ளமுது கும்பமே தித்திக்கும் செங்கரும்பே
பிள்ளைக் கலிதீர்த்த பெரிய மதக் குஞ்சரமே --ஆராரோ
மாணிக்க கால்நாட்டி வஜ்ர வடம்பூட்டி
ஆணிப்பொற் றொட்டிலிட்டேன் அருமருந்தே கண்வளராய்-- அராரோ அத்தை மடிமேலும் அம்மான்மார் தோள்மேலும்
வைத்துமுத் தாடிய மரகதமே கன்வளராய் -- ஆராரோ
.....?