மழலை

மழலைகளின் மல்யுத்தம்
மனதால் மட்டும்
மங்காத சிரிப்புடன்
மயக்கும் மழலையுடன்....

வெள்ளைமனம் கொண்ட
வெண்கலச் சிலைகள்
வெறுப்பு அறியாத
வெண்மதி சொர்க்கம்....

கபடுசூது அறியாத
கவரும் சிரிப்பு
கண்ணெதிரில் காண்கையில்
கனநொடியில் கண்ணாமூச்சி!!!

எழுதியவர் : கவி பாரதீ (6-Sep-21, 2:22 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : mazhalai
பார்வை : 1887

மேலே