பிரிவின் கடைசி துளிகள்
மழைக்கு இதமான
ராத்திரியில்
ஒரு நீண்ட பெருமூச்சு
அவன் வருகைக்கான
காத்திருப்பில்
மனதில் தேங்கி நிற்கும்
வலிகள் கண்ணீராய்
கசிந்திடுமோ
அவன் முன்னால் என
உதடுகள் துடிதுடிக்க
வலி இல்லாமல்
இறப்பது எப்படி என்ற
புத்தகத்தின் எல்லா
பக்கங்களிலும்
புன்னகையுடன் அவன்
சிரித்தபடி நின்றிருக்க
காபி கோப்பையின்
கடைசி துளியிலும்
தென்படும் கசப்புச்சுவை
மணித்துளிகளாய்
கரைகிறது தனிமையில்
அவன் பிரிவையும்
கொண்டாடி தீர்க்கவே
காத்திருக்கிறேன் அவன்
வரவை எதிர்பார்த்து
வழக்கம்போல் அவன்
வராமல் ஏமாற்றுவான்
என்பது தெரிந்தும்...ம்...ம்...

