ஆசிரியர் டைரி ஃபைசல்

ஒன்றரை ஆண்டுகள் குழந்தைகள் நடமாட்டம் இல்லாமல் , பள்ளியில் பயன்பாடற்றுக் கிடப்பதால் நாற்காலிகள், பென்ஞ்சுகள் ,கற்றல் பயன்பாட்டுத் தளவாடங்களும், CCTV மற்றும் கணினிகளும் அத்தனையும் பழுதடைந்துப் போய்விட்டன..... பல பொருட்கள் செல் அரிக்கத் தொடங்கிவிட்டன.... கொஞ்சம் கொஞ்சமாக பழுது பார்க்கும் பணி மேற்கொண்டு வருகிறேன் ... கடைசியாக கணினியை சரி செய்ய முயற்சித்தேன்... இரண்டு டெக்னீஷியன்ஸ் பார்த்துவிட்டு அவ்வளவுதான் தூக்கிப் போட்டுவிட்டு , புதிதாய் கணினி வாங்குங்கள் என்று சொல்லிவிட்டார்கள்... இருக்கும் செலவோடு இதற்கும் பெரிய தொகை வேண்டுமே என்று உண்மையில் சோர்ந்துபோனேன்...

என் மனக்கவலையை கடவுள் உணர்ந்தாரோ இல்லையோ, என் அன்பு மாணவன் முகமது ஃபைசல் உணர்ந்திருப்பான் போலும்... நேற்று திடீரென என் நலம் விசாரிக்க கைப்பேசியில் அழைத்தான் ... இன்று அத்தனை வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, காலையிலேயே பள்ளிக்கு வந்து கணினியை எந்த செலவும் இல்லாமல் சரி செய்து இயங்க வைத்து ... புதிதாய் ஜியோ WiFi இணைப்பும் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுச் சென்றான் ... அவனுக்குக் கைம்மாறாக அன்பைத் தவிற வேறெதும் செய்ததில்லை..... பள்ளியைவிட்டுச் சென்று 21 ஆண்டுகள் கடந்தாலும், படித்தப் பள்ளியையும் கற்றுக் கொடுத்த ஆசிரியரையும் மறவாத ஃபைசல் போன்ற மாணவர்களை பெற்றிருப்பதே யான் பெற்றப் பெரும்பேறாக நினைக்கிறேன் .... Thank you A. Mohamed Faizel

எழுதியவர் : வை.அமுதா (7-Sep-21, 7:36 pm)
பார்வை : 50

மேலே