காதல் மனம்

மனிதனின் மனதில்
காதல் பிறந்து விட்டால்
கண் மண் தெரிவதில்லை
கால்களும் பூமியில்
நிற்பதில்லை ..!!

மனசும் சிறகு முளைத்த
பறவைபோல் வானில்
பறக்க தொடங்கிவிடும் ..!!

காதலியின் வருகைக்காக
கால நேரம் மறந்து
மணிக்கணக்கில்
காத்திருக்கும் மனசு ..!!

காதலர்களின் வாழ்வில்
இந்த நிகழ்வுகள் யாவும்
திருமணம் முடிந்த பின்பும்
தொடர்ந்து இருந்தால்
பூமியில்
அவனே பாக்கியவான்..!!

அருகில் வந்தவள்
உருகி நின்று விட்டு
கொடுத்த அன்பை
பறித்து சென்று விட்டால்

சிலர் மது கோப்பையுடன்
கால் போனபோக்கில்
காலத்தை கடக்கிறார்கள்

சிலர் காதலை மனசுக்குள்
மறைத்து வாழ்கிறார்கள் ..!!

ஆவதும் பெண்ணாலே
ஆழிவதும் பெண்ணாலே
என்ற பழமொழியின்
உண்மையை மனித மனம்
முடிவில் உணருகிறது ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Sep-21, 11:59 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal manam
பார்வை : 185

மேலே