பாரதியார் நினைவு நாள் அஞ்சலி

"மகாகவி பாரதியாரின்
நூறாவது ஆண்டு நினைவு
நாள் கவிதை அஞ்சலி"

11.9.21

"எட்டையபுரத்தில் உதித்த
'ஒருவன்',
எளிதில் எட்டாததையும்,
நமக்கு எட்ட வைக்க
தவித்த 'கவிஞன்' .

தாய்நாட்டை உயிரென
நேசித்த 'இளைஞன்',
தாய்மொழியை மூச்சாக
சுவாசித்த 'கலைஞன்' .

சாதிகள் இல்லை என
பாப்பாவிடம் உரைத்த 'மனிதன்',
மோதி, மோதி, வார்த்தைகளால் தீண்டாமையை ஒழித்த 'புனிதன்'.

காக்கை, குருவியை சொந்தமென்ற 'கலைஞன்' ,
யாக்கை உருகிய போதும்
தளராத 'அறிஞன்'.

சுதந்திரம் நம் பிறப்புரிமை என
உரைத்த 'தலைவன்',
அதை சிலர் பறிக்க நேர்ந்த போது
துடித்த 'மனிதன்'.

கண்ணனை காதலித்த 'ரசிகன்',
கண் என காளியை துதித்த 'பக்தன் '.

இமைப் பொழுதும் சோராமல்,
இறுதி வரை
யாரிடமும், எதுவும், கோராமல்
வாழ்ந்த '!மகாகவி '.

எங்கும் காணக்கிடைக்காத,
என்றும் காண முடியாத,
'மேதாவி '.

இன்னும் சொல்லிக்கொண்டே
போகலாம் ,
இருககிறது அவரிடம் பலவும்,
நாம் 'அறிய',
இருககிறது அவரிடம் பலவும்,
நாம் கற்க வேண்டியது 'நிறைய'.

அதற்குள் என்ன அவசரம்
அவருக்கு 'மறைய ?'
நினைத்த வேதனையில்
கண்கள் கண்ணீரில் 'கரைய',

அட! அதற்குள்ளாகவாஆகி விட்டது ஆண்டுகள் நூறு ?
என வேதனையில் மனம் 'உறைய',

எண்ணலாமா, அவர் வழியில்
இனியாவது 'விரைய',
என தொடங்கியது
மனது 'இரைய'.

யாரை பற்றி இப்படியெல்லாம் பேசுகிறேன்?

சீர்திருத்த கருத்தகளின் 'சாரதி',
ஆம்! நம் 'மகாகவி பாரதி !'

அவரை பற்றி தான் 'யோசிக்கிறேன்',
அவர் வாழ்ந்த காலத்தை
மிகவும் 'நேசிக்கிறேன்',
'இப்பூமிக்கு அவரை திருப்பி
தா ' என இறைவனை மீண்டும்
மீண்டும் யாசிக்கிறேன்."

"வாழ்க என்றென்றும் அம் மாமனிதரின் புகழ்.
--------

எழுதியவர் : (11-Sep-21, 3:01 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 151

மேலே