ஏராளமாய்

93 வருடங்கள்
உன்னைப் பிரிந்திருப்பேன்
அது தான் தண்டனை,
நீ செய்த
தவறுக்கு....
என்றாள்.

வேண்டாம்..
கெஞ்சினேன்.

கொஞ்சம்
மனமிரங்கினாள்.

சரி, போ...
83 வருடங்கள் மட்டும்
பிரிந்திருக்கிறேன்
என
கருணை?!
காட்டினாள்.

சும்மாவா சொன்னாங்க,
'உறவில் அல்ல...
பிரிவில் தான்
காதலை முழுமையாக
உணர முடியும்.'

காதலை
கசடற
உணர்ந்தேன்.

இப்போது
காதல் இருக்கிறது
நிறைய...
கூடவே
உன் நினைவுகளும்.

என்னை
விட்டுச் சென்ற
நீ
ஏன் நினைவுகளையும்
விட்டுச் சென்றாய்....?.

வெளியே
எடுத்தெறிய
வேண்டிய போதுதான்
தெரிந்தது,
என்னுள்
எவ்வளவு
ஆழமாக
இறங்கியிருக்கிறாய்
என்று...


மறக்க முயலும் போதுதான்
தெரிந்தது,
காதல் மட்டுமல்ல...
நினைவுகளும்
மிச்சமிருக்கிறது
ஏராளமாய்...



.

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (11-Sep-21, 2:54 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 40

மேலே