முதலிரவு

முதலிரவு 🌔✨

காதல் பூ🌹ஒன்றை
மனதில் ஏந்தி,
காதலி ஒருத்தியை
தேடியபோது,
கன்னியர் பலர்🌼🏵️🌺
வந்த போதும்,
பூ அதனை நான்
கொடுக்கவில்லை.

கார்முகில் முடி
கொண்டு,
கயல் மீன்🦈 இரண்டு
கொண்டு,
கன்னத்தில் பவளம்
புதைத்து,
உதட்டில் செவ்வானம்
வரைந்து,
அதனுள் முத்துக்கள்
மறைத்து,
முகமதனில் தமிழர்
நிறம் பூசியே
குயில் எனக் குரல்
கொடுத்து வந்த நீ 🌻
காதல் பூ வை
பறித்துச் சென்றாய்.

காதலன் காதலி
ஆனோம்,🌹🌻
காலங்கள் சில
கழித்து,
வந்தவரும் வராதவரும்
வாழ்த்த,🎇🎇
கணவன் மனைவி
ஆகிவிட்டோம்🎀
நாமின்று.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (12-Sep-21, 5:20 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : muthaliravu
பார்வை : 160

மேலே