ஆற்றல் போதும் நேரிசை வெண்பா

நற்பண் புடன்வாழ்வில் நாடுபோற்ற வாழ்வதற்காய்
கற்கின்றக் கல்வியெனும் கற்கண்டை - அற்புதமாய்
உட்கொள்ளும் ஆற்றல் உனக்கிருந்தால் போதுமடா
பட்டதாரி யாகலாம் பார்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Sep-21, 1:20 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 29

மேலே