கண்டதும் காதல்

மாலை சூரியனும் மீண்டெழும்
உன் அழகினைக் கண்டு!
பூத்திடும் சிறு பூக்களும்
ஏங்கிடுமே உன் இதழினுகின்று!
காரிருள் மறைந்திடுமே உன்
பொலிவினைக் கண்டு- அதனால்
அந்தச் சந்திரனும் வணங்கிடுமே
உன்னை வீதியில் நின்று!
இசைகளும் தோற்றிடுமே உன்
தேன் மொழிகளைக் கண்டு!
அடடா ! எழுந்ததே அச்சம்
என் மனதினை இழபெநென்று!
எனவே செய்வதறியாத திகைத்து
நிற்கிறேன் உன்னைக் கண்டு!.

எழுதியவர் : ஹரிஹரன் (14-Sep-21, 12:11 am)
சேர்த்தது : Hariharan S
Tanglish : kandathum kaadhal
பார்வை : 55

மேலே