அழுக்குச் சட்டைக்காரனுக்கு அஞ்சலி
ஆண்டுக்கொரு முறை
அஞ்சலி செலுத்த
நிச்சயம்
நீ வருவாயானால்
இன்றைக்கே
இறந்துவிடத்
தயார்...
என்றான்
ஒரு
கிறுக்கன்.
அவன் அழுக்குச் சட்டைக்காரன்.
அழகான மனதுக்காரன்.
அவன் என் மனதுக்கு சொந்தக்காரன்.
காதலில்
யாரேனும்
ஒருவருக்கு அஞ்சலி
என்பது
காதலுக்கே
அஞ்சலி
அல்லவா?.
எதற்கும்
யாருக்கும்
அஞ்சலி செலுத்த
பிரியமில்லை,
எனக்கு.
அழுக்குச் சட்டைக்காரனுக்கு
அஞ்சலி
என்று தலைப்பு
இருந்ததே...?
என்று கேட்கத் தோன்றுமே.....
தலைப்பிருந்தால்,
அஞ்சலி
செலுத்தியே
ஆக வேண்டுமா.?
அ..
அ...
என்று ஒரூ
எதுகை மோனைக்குத்தான்.
எப்போதும்
என்னால் என்
அழுக்கு சட்டைக்காரனுக்கு
அஞ்சலி
செலுத்தவே முடியாது.
ஏனெனில்,
நான்
உயிருடன் இருக்கும் வரை,
என்னைத்
தாண்டிதான்
மரணம் கூட
அவனை
அணைக்க முடியும்..!
.
✍️கவிதைக்காரன்