கொசுக்களின் போராட்டம் - மேல்முறையீடு

கொசுக்களை அழிக்க நீதிமன்றம் கட்டளையிட்டதால், ஊரெங்கும் புகைமூட்டமாகின. மனிதனின் நண்பர்களான தேனி, வண்ணத்துப் பூச்சு மற்றும் கும்பிடு பூச்சி போன்றவையும் சேர்ந்து அழிந்தன.

கொசுக்களின் தலைவன் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையிட்டான்.
கொசுக்களில் , மனிதனின் ரத்தம் உறிஞ்சி அதிகமான நோய்களைப் பரப்புவது பெண் கொசுக்கள் தான். பழச்சாறுகளை உண்டு வாழும் ஆண் கொசுக்கள் அல்ல என இம்முறை நீதிபதியிடம் வாதாடினான்.
பெண் கொசுக்கள், முட்டைகளை உருவாக்க வெறும் பழச்சாறு பத்தாது என்பதல் இப்படியொரு குறுக்கு வழியில் போய்விட்டார்கள் என்று மன்றாடினான்.

வேறு எந்த பூச்சிகளாலும் இவ்வளவு மரணம் இல்லையென்றும், பெண் கொசுக்களால், சைவ ஆண் கொசுக்களும் சேர்ந்து கொல்லப்படுவார்கள் என்று இறுதியாக தீர்ப்பளித்தார் உயர் நீதிபதி.

இனி, உயிர்மேல் ஆசைகொண்ட ஆண் கொசுக்கள் காடுகளில் அல்லது, சாக்கடையில் மட்டும் வாழ்வது என்றும், பெண் கொசுக்களைத் தேடி மனிதர்களின் பக்கம் செல்லக்கூடாது என கொசுக்களின் தலைவன் முடிவெடுத்தான்.
பெண் கொசுக்களின் சோம்பேறிக்கு, ஆண் கொசுக்களின் உயிரும்,மனிதர்களின் உயிரும் பலியாகின்றதால் காலத்துக்கும் கொசுக்கள் இந்த அவப்பெயரைச் சுமக்க வேண்டும் என நிலைமை வந்து விட்டது என ஆண் கொசுக்கள் தவித்தன. சிலந்தியின் வலை, சிறு வயதில் நீரில் மீன்களின் வேட்டை என பல தடைகள் கடந்தாலும் மனிதர்களின் கோபத்தில் கொசுக்கள் பேரழிவு எதிர்கொள்ள பல கோடி ஆண் கொசுக்கள் அநியாயமாய் இறப்பதைத் தடுக்க யாராலும் முடியவில்லை.

திருந்தியப் பெண் கொசுக்கள் இயல்பு நிலைக்கு வரப்போவதும் இல்லை, ஆங்காங்கே,குப்பைகள் நிறைந்த சிறு சிறு நீர்தேக்க விடுதிகளில் இனப்பெருக்கம் குறையப் போவதும் இல்லை என தன்னை மட்டும் பக்குப்படுத்தி மனித வாசனைகள் இல்லாத இடத்தைத் தேடி பறந்தன சில ஆண் கொசுக்கள்...

நன்றி
#siven19
கொசுக்களின் போராட்டம் - மேல்முறையீடு

எழுதியவர் : Siven19 (14-Sep-21, 11:14 pm)
சேர்த்தது : siven19
பார்வை : 87

மேலே